editor.mrrjournal@gmail.com +91-9650568176 E-ISSN: 2584-184X

MRR Journal

Abstract

Indian Journal of Modern Research and Reviews, 2026; 4(2): 395-400

செவ்விலக்கியத் தொன்மம் புலப்படுத்தும் தாய்தெய்வ வழிபாட்டின் பரிணாமங்கள்

Author Name: முனைவர். ஈஸ்வரன் க

1. உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா

Abstract

<p>பொதுவுடமைச் சமூகம் புழக்கத்தில் வரும் முன்பு ஆதி சமூகம் என்பது இப்புவிவெளியில் நிலைத்து நின்றது என்பது மறுக்கப்படும் உண்மையாகும். இவ்வாதிச் சமூகமானது பலதரப்பட்ட பண்பாட்டுப் புழக்கத்தில் தன்னை தகவமைத்து கடந்து சென்றது. அத்தகைய பண்பாட்டுப் புழக்கத்தில் வழிபாடு என்பது மிக முக்கியத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இத்தகைய முறையானது அனுபவம்,அறிவு போன்றவற்றைத் தாண்டி நம்பிக்கை என்ற தன்மையில் நின்றது. இந்நம்பிக்கை இறைவழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு நின்றது. இறை என்பதை பின்னர் முன்னோர் என்ற வழக்கில் வழிபட்டனர். அவ்வழிபாடு சிறுதெய்வம் என்ற கட்டுக்குள் நிறுவப்பட்டது. இத்தகைய நிறுவனமயமாக்களில் தாய் என்பவள் தனித்த இடத்தைப் பிடித்து நின்றாள். இத்தகைய தாய் அல்லது பெண் என்பள் கால ஓட்டத்தில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். நாகரிக நிலை அடையப் பெற்றபின் இரண்டாம் நிலை பெண் என்பவள் குலம் சார்ந்த, இனம் சார்ந்த வழிபாட்டிற்குள் நிலைத்து நின்றாள். இத்தகைய நிலைப்பு தன்மையே பின்னாளில் தாய் தெய்வம் அல்லது பெண் தெய்வம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இப்பெண் சார்ந்த வழிபாடு எப்பொழுது தொடக்கம் பெற்றது, அதன் பரிணாம நிலையின் தன்மை, இத்தன்மை எவ்வாறு இலக்கியங்களில் ஊடுருவியது, இலக்கியங்கள் கூறும் தாய் தெய்வ அல்லது பெண் தெய்வ உருவாக்கம் எத்தகையது என்பதை விவரிப்பதே இவ்வாய்வு கட்டுரையாகும்.&nbsp;</p>

Keywords

செவ்விலக்கியம், பெண்தெய்வம், தாய்தெய்வம், வெகுசனம், இலக்கியவெளி, இயங்குதளம், புலப்பாடு, இலக்கிய உருவாக்கம், பரிணாம நிலை.